Wednesday, August 6, 2008

மு மேத்தா கவிதைகள்

ஆகாயம்

விழிகள் ஆகாயத்தை வருடினாலும்
விரல்கள் என்னவோ சன்னல்
கம்பிகளோடுதான் !


சிறுகுறிப்பு வரைக

அமெரிக்கா

தலையில் எண்ணெய்
தடவுவார்கள் உலகில்
அமெரிக்காவோ
எண்ணெய்க்காகவே
வளைகுடா நாடுகளில்
தலையைத் தடவுகிறது.

ஈராக்

ஈராக் அழிந்து
சிதைந்த பிறகுதான்
தெரிந்தது
பேரழிவு ஆயுதங்கள்
எவர் கையில்
இருந்ததென்பது?

- மு மேத்தாவின் " ஆகாயத்துக்கு அடுத்த வீடு " கவிதை தொகுப்பிலிருந்து

Tuesday, August 5, 2008

மென்பொருள் வல்லுனன்...

எழுந்துவிட்ட அதிகாலை,
எழுப்பிவிட்ட கடிகாரம்,
காத்திருக்கும் கடமை,
இன்னும் உறங்கும் நண்பன்,
சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்து கடைத்தேநீர்,
இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,
விரும்பிய இசை பாடும் குறுவட்டு,
சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,
இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,
எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,
இத்தனை இருந்தும் ஏதோ இழப்பத்தாய் உணர்வு,
இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,
நாளைய காலையின் விழிப்பிலாவது
தாயின் " எட்டு மணியாச்சு இன்னும் தூக்கத்தைப் பாரு " எனும் குரல்
கேட்காதா
என்ற எதிர்பார்ப்போடு...,
இங்கனம்,
பாசத்தை கூட தவணை முறையில் பெரும்

---மென்பொருள் வல்லுனன்.
( பொருளை தேடுவதில் வாழ்கையை தொலைத்த வல்லுனன் ).

சே குவேரா


உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே .....
--- சே குவேரா 

Friday, August 1, 2008

படித்ததில் பிடித்தவை

' பெரிய கத்தியை தேர்ந்தெடுக்கிறாயா, இல்லை சிறிய கத்தியை தேர்ந்தெடுக்கிறாயா என்பது முக்கியம் இல்லை. எதிரியின் இதயத்துக்கும் உன் கத்தி முனைக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்பதுதான் முக்கியம் '.
- விகடனின் கதவிலாசத்திலிருந்து ...

Wednesday, July 30, 2008

நான் ரசித்த கவிதைகள்

நன்றி !

பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்த
அந்த தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்.

இறங்கி செல்கையில்
நன்றியோடு பார்த்தால்
கைப்பிள்ளையின்
கால் கொலுசை தடவியபடி !


மறதி !

கற்புக்கரசி
கண்ணகி, சீதை,
நளாயினி
பெயரெல்லாம்
நினைவில் நிற்கிறது!

கற்றுக்கொடுத்த
தமிழ் ஆசிரியை
பெயர்தான்
மறந்துவிட்டது!

Saturday, July 26, 2008

ஈரோடு புத்தக கண்காட்சி


மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத்திருவிழா, நான்காவது ஆண்டாக நடைபெறவுள்ளது.
ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 11வரையில் தினமும் நடைபெறவுள்ள இப் புத்தகத்திருவிழாவில் பல பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
பார்வையாளர்கள் கட்டணமின்றி இப்புத்தகத்திருவிழாவில் பங்குபெறலாம்.
இந்த ஆண்டு புத்தகத்திருவிழா அமைப்பாளர்கள் மூன்று சிறப்பு அரங்கங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழர் வரலாற்று அரங்கம்
பல்வேறு பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்ட தமிழர் பண்பாடு, தமிழர் வரலாற்றுடன் தொடர்பில் வெளியான புத்தகங்கள் அனைத்தும் இவ்வரங்கில் கிடைக்கும்.
உலகத் தமிழர் படைப்பு அரங்கம்
பல்வேறு பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்ட, இந்தியாவிற்கு வெளியில் - ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்களில் வாழ்கின்ற தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் பலவும் இந்த அரங்கில் கிடைக்கும்.
தமிழ்ப் பேச்சுக்கள் அரங்கம்
பல்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட தமிழகத்தின் சிறந்த மேடைப் பேச்சாளர்களின் இலக்கியப் பேச்சுக்களின் குறுந்தகடுகள் (Audio CD) அனைத்தும் இவ்வரங்கில் கிடைக்கும். 

Thursday, July 24, 2008

ஐந்தாம் வகுப்பு 'ஆ' பிரிவு

மழை பெய்யா நாட்களிலும்
மஞ்சள் குடையோடு வரும்
திலகவதி டீச்சர்
வகுப்பின் முதல் நாளன்று
முன்பொருமுறை
எங்களிடம் கேட்டார்:
" படிச்சி முடிச்சதும்
என்ன ஆகப்போறீங்க?"

முதல் பெஞ்ச்சை
யாருக்கும் விட்டுத்தராத
கவிதாவும் வனிதாவும்
"டாக்டர்" என்றார்கள் சத்தமாக.
இன்று கல்யாணம் முடிந்து
குழந்தைகள் பெற்று
ரேஷன் கடை வரிசையில்
கவிதாவையும்,
கூந்தலில் செருகிய சீப்புடன்
குழந்தைகளை
பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதாவையும்
எப்போவது பார்க்க நேர்கிறது.

" இன்ஜீனியர் ஆகப்போறேன் "
என்ற எல்.சுரேஷ் குமார்
பாதியில் கோட்டடித்து
பட்டு தறி நெய்யப் போய்விட்டான் .

" எங்க அப்பாவுடைய
இரும்புக் கடையை பார்த்துப்பேன்"
கடைசி பெஞ்ச்
சி.என்.ராஜேஷ் சொன்னபோது
எல்லோரும் சிரித்தார்கள்.
இன்றவன் நியூஜெர்சியில்
மருத்துவராகப்
பணியாற்றிக்கொண்டே
நுண்உயிரியலை ஆராய்கிறான்.

" ப்பிளைட் ஓட்டுவேன் "
என்று சொல்லி
ஆச்சர்யங்களில்
எங்களை தள்ளிய
ஜஸ்டின் செல்லபாபு,
டி.என்.பீ.எஸ்.சி எழுதி
கடைநிலை ஊழியன் ஆனான்.

"அணுசக்தி விஞ்ஞானியாவேன் "
என்ற நான்
கவிதை எழுதிகொண்டிருக்கிறேன்.

வாழ்கையின் காற்று
எல்லோரையும்
திசை மாற்றி போட,
" வாத்தியாரவேன் "
என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த அதே பள்ளியில்
ஆசிரியராக பணியாற்றுகிறான்.
" நெனச்ச வேலையே செய்யறே,
எப்படியிருக்கு மாப்ளே ? " என்றேன்.
சாக்பீஸ் துகள் படிந்த விரல்களால்
என் கையை பிடித்து
" படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப்போறீங்க?" ன்னு
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை என்றான்.
- நா.முத்துகுமார்

படித்ததில் பிடித்தவை

மாணவர்கள் !

பந்தயத்தில் வெற்றிபெறவேண்டும் - என்று
நம்பி பல லட்சங்கள் கட்டப்பட்ட
பந்தய குதிரைகள்