Wednesday, August 6, 2008

மு மேத்தா கவிதைகள்

ஆகாயம்

விழிகள் ஆகாயத்தை வருடினாலும்
விரல்கள் என்னவோ சன்னல்
கம்பிகளோடுதான் !


சிறுகுறிப்பு வரைக

அமெரிக்கா

தலையில் எண்ணெய்
தடவுவார்கள் உலகில்
அமெரிக்காவோ
எண்ணெய்க்காகவே
வளைகுடா நாடுகளில்
தலையைத் தடவுகிறது.

ஈராக்

ஈராக் அழிந்து
சிதைந்த பிறகுதான்
தெரிந்தது
பேரழிவு ஆயுதங்கள்
எவர் கையில்
இருந்ததென்பது?

- மு மேத்தாவின் " ஆகாயத்துக்கு அடுத்த வீடு " கவிதை தொகுப்பிலிருந்து

Tuesday, August 5, 2008

மென்பொருள் வல்லுனன்...

எழுந்துவிட்ட அதிகாலை,
எழுப்பிவிட்ட கடிகாரம்,
காத்திருக்கும் கடமை,
இன்னும் உறங்கும் நண்பன்,
சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்து கடைத்தேநீர்,
இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,
விரும்பிய இசை பாடும் குறுவட்டு,
சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,
இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,
எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,
இத்தனை இருந்தும் ஏதோ இழப்பத்தாய் உணர்வு,
இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,
நாளைய காலையின் விழிப்பிலாவது
தாயின் " எட்டு மணியாச்சு இன்னும் தூக்கத்தைப் பாரு " எனும் குரல்
கேட்காதா
என்ற எதிர்பார்ப்போடு...,
இங்கனம்,
பாசத்தை கூட தவணை முறையில் பெரும்

---மென்பொருள் வல்லுனன்.
( பொருளை தேடுவதில் வாழ்கையை தொலைத்த வல்லுனன் ).

சே குவேரா


உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே .....
--- சே குவேரா 

Friday, August 1, 2008

படித்ததில் பிடித்தவை

' பெரிய கத்தியை தேர்ந்தெடுக்கிறாயா, இல்லை சிறிய கத்தியை தேர்ந்தெடுக்கிறாயா என்பது முக்கியம் இல்லை. எதிரியின் இதயத்துக்கும் உன் கத்தி முனைக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு இருக்கிறது என்பதுதான் முக்கியம் '.
- விகடனின் கதவிலாசத்திலிருந்து ...